Quinine

Quinine பற்றிய தகவல்

Quinine இன் பயன்கள்

மலேரியா மற்றும் பெருமூளை மலேரியா சிகிச்சைக்காக Quinine பயன்படுத்தப்படும்

Quinine எப்படி வேலை செய்கிறது

Quinine உடலில் மலேரியா கிருமிகளின் எண்ணிக்கையை குறைக்கிறது.

Quinine இன் பொதுவான பக்க விளைவுகள்

குமட்டல், வயிற்றில் வலி, மங்கலான பார்வை, தூக்க கலக்கம், முகம் சிவந்து போதல், தலைவலி, மாற்றப்பட்ட இதயத்துடிப்பு, காதில் ரீங்காரமிடுதல், வியர்வை அதிகரித்தல், வெர்டிகோ, வாந்தி

Quinine கொண்ட மருந்துகள்

  • ₹9 to ₹133
    Ipca Laboratories Ltd
    6 variant(s)
  • ₹27 to ₹114
    McW Healthcare
    5 variant(s)
  • ₹28 to ₹114
    McW Healthcare
    3 variant(s)
  • ₹19 to ₹133
    Shreya Life Sciences Pvt Ltd
    4 variant(s)
  • ₹15 to ₹58
    Skymax Laboratories Pvt Ltd
    5 variant(s)
  • ₹45 to ₹118
    Lark Laboratories Ltd
    3 variant(s)
  • ₹9 to ₹54
    Cipla Ltd
    2 variant(s)
  • ₹59 to ₹70
    Leben Laboratories Pvt Ltd
    2 variant(s)
  • ₹54
    Lincoln Pharmaceuticals Ltd
    1 variant(s)
  • ₹59 to ₹65
    Leo Pharmaceuticals
    2 variant(s)

Quinine தொடர்பான நிபுணரின் அறிவுரை

  • வயிற்றுப்போக்கு வாய்ப்புகளை குறைப்பதற்கு இந்த மருந்தை உணவுடன் உட்கொள்ளவேண்டும்.
  • உங்களுக்கு வழக்கமற்ற இருதய துடிப்பு தொடர்பான ஏதேனும் இருதய பிரச்சனைகள் அல்லது ஏதேனும் கல்லீரல் அல்லது சிறுநீரக குறைபாடு இருந்தால் உங்கள் மருத்துவரிடம் கூறவும்.
  • உங்களுக்கு விளக்கமுடியாத இரத்தக்கசிவு அல்லது சிராய்ப்பு போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவ உதவியை பெறவும். ஏனெனில் க்வினைன் இரத்தத்தில் உள்ள பிளேட்லெட் அளவை குறைக்கக்கூடும் (த்ரோம்போசைட்டோபீனியா).
  • க்வினைன் உடனான சிகிச்சையின்போது இரத்த க்ளுகோஸ் அளவுகளை வழக்கமாக சோதிக்கவேண்டும்.
  • நீங்கள் கருவுற்றிருந்தாலோ, கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
  • க்வினைன் அல்லது அதன் உட்பொருட்கள் அல்லது மேப்பிலோக்வினைன் அல்லது க்வின்டைன் மீது ஒவ்வாமை இருந்தால் இதனை உட்கொள்ளக்கூடாது.
  • நீடித்த QT இடைவெளி (இருதய குறைபாடுகளை விளைவிக்கும் இருதய குறைபாட்டு மின்சார செயல்பாடு) உள்ள நோயாளிகள் இதனை தவிர்க்கவேண்டும்.
  • க்ளுகோஸ் 6 பாஸ்பேட் டீஹைட்ரொஜேநெஸ் குறைபாடு (ஒரு பரம்பரை சிவப்பணு பாதிக்கும் குறைபாடு) உள்ள நோயாளிகள் இதனை தவிர்க்கவேண்டும்.
  • மையாசுதீனியா க்ரேவிஸ் (தீவிர தசை தளர்ச்சியை விளைவிக்கும் ஒரு அரிதான குறைபாடு) நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் இதனை உட்கொள்ளக்கூடாது.
  • ஆப்டிக் நியூட்ரிடிஸ் (பார்வை குறைபாடுகளை விளைவிக்கும் கண் நரம்பு அழற்சி) உள்ள நோயாளிகள் இதனை தவிர்க்கவேண்டும்.
  • கருப்பு நீர் காய்ச்சல் (மலேரியா பிரச்சனை), த்ரோம்போட்டிக் த்ரோம்பஸைடோபேனிக் புர்புரா(அரிதான இரத்த குறைபாடு) அல்லது த்ராம்போசைட்டோபீனியா (இரத்தத்தில் அசாதாரண குறைந்த பிளாட்லட் எண்ணிக்கை) போன்றவை உள்ள நோயாளிகள் இதனை உட்கொள்ளக்கூடாது.
  • டின்னிடஸ் (காதுகளில் ரீங்காரம்) அல்லது ஹெமதுரியா (சிறுநீரில் இரத்தம்) போன்றவை இருக்கும் நோயாளிகள் இதனை தவிர்க்கவேண்டும் .