Hydroquinone

Hydroquinone பற்றிய தகவல்

Hydroquinone இன் பயன்கள்

மெலாஸ்மா (தோலில் கருப்பு அல்லது நிறமற்ற திட்டுகள்) சிகிச்சைக்காக Hydroquinone பயன்படுத்தப்படும்

Hydroquinone எப்படி வேலை செய்கிறது

Hydroquinone தோலுக்கு நிறத்தை தரும் (மெலனின்) என்னும் இரசாயனத்தின் உற்பத்தியை தடுக்கிறது.
ஹைட்ரோகுவினோன் தோலினை கருப்பாக்கும் மெலனின் (மெலனோசைட்டுகள்)என்னும் தோல் பிக்மென்டின் தேக்கத்தை கறைப்பத்ன மூலம் தோலினை ப்ளீச் செய்கிறது. அது மெலனின் உருவாக்கத்தில் தலையிட்டு மெலனின் உண்டாக்கும் செல்களின் உள்ள முக்கிய செயல்முறைகளை தடை செய்கிறது.

Hydroquinone இன் பொதுவான பக்க விளைவுகள்

உலர் தோல், அரிப்பு, தோல் எரிச்சல், தோல் உரிதல், தோல் சிவத்தல்

Hydroquinone கொண்ட மருந்துகள்

  • ₹153 to ₹219
    Yash Pharma Laboratories Pvt Ltd
    2 variant(s)
  • ₹173
    Abbott
    1 variant(s)
  • ₹114 to ₹3199
    Anabolic Nation
    6 variant(s)
  • ₹113
    Resilient Cosmecueticals Pvt Ltd
    1 variant(s)
  • ₹550 to ₹1100
    Percos India Pvt Ltd
    6 variant(s)
  • ₹139 to ₹456
    Unimarck Pharma India Ltd
    2 variant(s)
  • ₹90
    Panzer Pharmaceuticals Pvt Ltd
    1 variant(s)
  • ₹70
    Dermo Care Laboratories
    1 variant(s)
  • ₹56
    Dermo Care Laboratories
    1 variant(s)
  • ₹242
    Percos India Pvt Ltd
    1 variant(s)

Hydroquinone தொடர்பான நிபுணரின் அறிவுரை

  • ஹைட்ரொக்யுனைன் தயாரிப்புகளை கவனமாக பயன்படுத்தவும். இதன் சரும ப்ளீச்சிங் செயல்பாடு, செயல்பாட்டு முறையை தவிர்த்து பயன்படுத்தும்போது தேவையற்ற அழகுசாதன விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
  • ஹைட்ரொக்யுனைன் பயன்படுத்தும்போது சன்ஸ்க்ரீன் க்ரீம் பயன்படுத்தவேண்டும். சூரிய வெளிப்பாட்டை தவிர்க்கவேண்டும் மற்றும் சிகிச்சை செய்யப்பட்ட பகுதிகளை மறைத்துக்கொள்ளவேண்டும்.சிறிதளவு சூரிய வெளிப்பாடு கூட ஹைட்ரொக்யுனைன்-யின் ப்ளீச்சிங் பயன்பாட்டைமாற்றிவிடக்கூடும்.
  • ஹைட்ரொக்யுனைன்-ஐ சருமத்தில் பயன்படுத்தியபிறகு உங்களுக்கு சரும ஒவ்வாமை அல்லது நீலம்-கருப்பு கருமையாகுதல் ஏற்பட்டால் உடனடியாக அதனை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, மருத்துவரை தொடர்பு கொள்ளவேண்டும். 
  • ஹைட்ரொக்யுனைன் க்ரீம்கள் சருமத்தின் வெளிப்புற பயன்பாட்டிற்கு மட்டுமே. க்ரீம் உங்கள் கண்கள்,மூக்கு, வாய் அல்லது உதடுகளில் பட்டுவிட்டால்உடனடியாக தண்ணீர் கொண்டு கழுவவேண்டும்.
  • ஹைட்ரொக்யுனைன் க்ரீம்களை உடைந்த, எரியும் அல்லது காயம் அடைந்த சருமத்தில் பயன்படுத்தக்கூடாது.
  • ஹைட்ரொக்யுனைன்-ஐ பெராக்ஸைட் (ஹைட்ரொஜென் பெராக்ஸைட்/பென்சாயில் பெராக்ஸைட்) உள்ள இதர க்ரீம்களுடன் பயன்படுத்தக்கூடாது. இது உங்கள் சருமத்தை கருமையாக்கிவிடும் அதனால் பெராக்ஸைட்-ஐ நிறுத்திவிட்டு சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு கழுவவேண்டும்.
  • மருத்துவர் பரிந்துரை செய்தால் அன்றி ஹைட்ரொக்யுனைன்-ஐ ரெசோர்கினால், பீனால் அல்லது சலிசைக்ளிக் அமிலம் உள்ள இதர க்ரீம்களுடன் உபயோகிக்கக்கூடாது.
  • ஹைட்ரொக்யுனைன்-யில் ஸல்பைட்ஸ் உள்ளனவா என்று சோதிக்கவும்.இத்தகைய தயாரிப்புகள் ஆஸ்துமா உள்ள நபர்களிடம் ஒவ்வாமை எதிர்வினைகளை உண்டாக்கக்கூடும்.
  • ஏதேனும் ஒவ்வாமை எதிர்வினைகளை தவிர்க்க நீங்கள் ஒரு சரும உணர்திறன் சோதனையை மருத்துவரின் அறிவுரைப்படி மேற்கொள்ளவேண்டும்.
  • நீங்கள் கருவுற்றிருந்தாலோ, கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ ஹைட்ரொக்யுனைன்-ஐ பயன்படுத்துவதற்குமுன் உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.